News March 1, 2025
கிரிப்டோகரன்சி மோசடி: மெளனம் கலைத்த தமன்னா

கிரிப்டோகரன்சியில் அதிக லாபம் தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை விளம்பரப்படுத்திய நடிகை தமன்னாவிடம் புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தன் மீதான புகாருக்கு தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளார். தனது குழு சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக பொய் செய்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Similar News
News March 15, 2026
நெருங்கும் தேர்தல்.. ₹500 கட்டுகளுக்கு RBI கட்டுப்பாடு

5 மாநில தேர்தல் காரணமாக, பணப்பட்டுவாடாவை தடுக்க ரிசர்வ் வங்கி மூலம் ECI பணிகளை தொடங்கியுள்ளது. அனைத்து வங்கிக் கிளைகளிலும் ₹5 லட்சத்துக்கு மேல் ₹500 கட்டுகள் வழங்கக்கூடாது என RBI வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாம். அதேநேரம், ₹200, ₹100 நோட்டுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் போடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
News March 15, 2026
தமிழக தேர்தல்.. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இனி பொதுமக்கள் வெளியே செல்லும்போது ₹50,000 வரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதற்கு மேல் பணத்தை எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பறக்கும்படையினர் சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்படும். SHARE IT
News March 15, 2026
நெருங்கும் தேர்தல்.. அதிமுகவில் புதிய மாற்றம்

தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக ஆட்சி மன்றக் குழுவை மாற்றி அமைத்து EPS அறிவிப்பு வெளியிட்டுள்ளார். EPS தலைமையிலான ஆட்சி மன்றக் குழுவில் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், SP வேலுமணி, வளர்மதி, வேணுகோபால் Ex MP, ஜஸ்டின் செல்வராஜ், இன்பதுரை MP ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அதிமுகவினர் செயல்பட வேண்டும் என EPS கேட்டுக்கொண்டுள்ளார்.


