News January 24, 2025

கிரிப்டோகரன்சி: Jio Coin மதிப்பு எவ்வளவு தெரியுமா?

image

அம்பானியின் Relaince- Jio நிறுவனம், Polygon Labs உடன் இணைந்து பணியாற்றும் அறிவிப்பு வெளியானது முதல், இணையத்தில் Jio Coin பெயர் அடிபட தொடங்கியது. Bitcoin போலவே ஆன்லைனில் இது அறிமுகம் ஆகலாம், இதன் தொடக்க மதிப்பு ரூ.43ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Blockchain, Web3-ஐ இந்தியாவுக்கு கொண்டுவர Jio திட்டமிடுவதாகவும் CoinDCX தளம் குறிப்பிட்டுள்ளது. Jio, இதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Similar News

News August 28, 2025

வியாழக்கிழமையில் குரு பகவானின் முழு அருள் பெற..

image

மந்திரம்:
குணமிகு வியாழ குரு பகவானே!
மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ குருபர நேசா!
கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!
குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமையில், இந்த மந்திரத்தை சொன்னால், வாழ்க்கையில் இன்பம் பெருகி என்றும் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.

News August 28, 2025

அதிமுக கூட்டணியில் துணை முதல்வர்.. புது வியூகம்!

image

நெல்லையில் பேசிய அமித்ஷா TN-ல் கூட்டணி அரசு அமையும் என்றார். அதுவே அண்ணாமலை, EPS-யை முதல்வராக்க உழைக்க வேண்டுமென்றார். இக்கருத்துகளின் பின்னணியில் முக்கிய அரசியல் நகர்வு இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள நெருடல்களை பாஜக சரி செய்யும், ஆனால் கூட்டணி அரசு தான் அமைய வேண்டும் என பாஜக திட்டவட்டமாக EPS தரப்பிடம் சொல்லியதாக தகவல்கள் உள்ளன. துணை முதல்வர் பதவியும் பாஜக கேட்பதாக சொல்லப்படுகிறது.

News August 28, 2025

லோன் வாங்குபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

தெருவோர கடைக்காரர்களுக்கான PM Svanidhi கடன் திட்டத்தில் வழங்கப்படும் தவணைக் கடன் ₹5,000 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் தவணை கடன் வரம்பு ₹15,000-ஆகவும், 2-ம் தவணை ₹25,000-ஆகவும், 3-ம் தவணை ₹50,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உரிய காலத்தில் தவணையை செலுத்தினால் சில சலுகைகளும் அளிக்கப்படுகிறது.

error: Content is protected !!