News November 16, 2024

கொடுமை.. 12 வயது சிறுமிக்கு ஹார்ட் அட்டாக்..!

image

தெலங்கானாவில் 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த நிவ்ரிதி என்ற அந்த சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது குளித்து விட்டு வந்த அவர், திடீரென நிலைக்குலைந்து கீழே விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

Similar News

News March 4, 2026

திருச்சி ரயில்வேயில் இந்தி பெயரை அகற்ற ஒப்புதல்

image

திருச்சி ரயில்வே நுழைவாயிலில் இந்தி பெயர் இடம்பெற்றதற்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திருச்சி ரயில்வே அலுவலகம் முன் திமுகவினர் போராட்டமும் நடத்தினர். இந்த விவகாரம் பெரும் பூதாகரமான நிலையில், இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். கல்வெட்டில் உள்ள இந்தி பெயர் உடனடியாக மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

News March 4, 2026

ரேஷன் கார்டுதாரர்களுக்கு.. விஜய் வாக்குறுதி

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கான வாக்குறுதிகளை விஜய் அளித்துள்ளார். இதன்படி, 500 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடை, ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் பாக்கெட் செய்து வழங்கப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பெண்களுக்கு பெண் எடையாளர், ஆண்களுக்கு ஆண் எடையாளர் என நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார். ரேஷன் அட்டைதாரர்களை இலக்காக கொண்ட இந்த வாக்குறுதி பற்றி உங்கள் கருத்து என்ன?

News March 4, 2026

தேமுதிக, நாதகவுக்கு சின்னம் ஒதுக்கியது ECI

image

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து ECI அறிவித்துள்ளது. தேமுதிகவின் கோரிக்கையை ஏற்றே இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக ECI கூறியுள்ளது. இத்தேர்தலில் தேமுதிக குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்று, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேபோல், நாதகவுக்கு இரு மாநிலங்களிலும் விவசாயி சின்னம் ஒதுக்கி ECI உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!