News August 21, 2025
5% தள்ளுபடியில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்: ரஷ்யா

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதால் இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ளது USA. இருப்பினும் கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும் என இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா அறிவித்துள்ளார். USA-ன் பல்வேறு வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியிலும் இருநாடுகளுக்கும் இடையேயான எரிபொருள் ஒத்துழைப்பு தொடரும் என்று ரஷ்ய துணை தூதரக தலைவர் ரோமன் பாபுஷ்கின் கூறியுள்ளார்.
Similar News
News January 20, 2026
ராசி பலன்கள் (20.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 20, 2026
காங்கிரஸ் MLA-க்களுக்கு ஷாக் கொடுத்த ராகுல்

TN காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2026 தேர்தல் தொடர்பாக ராகுல் நடத்திய ஆலோசனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல MLA-க்கள் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறியுள்ளனர். அப்போது ராகுல் தன்னிடமிருந்த ரகசிய சர்வேவை காட்டி MLA-க்கள் மீதான புகார்கள், 70% பேர் மீண்டும் போட்டியிட்டால் வெற்றிபெறும் வாய்ப்பு பற்றி சுட்டிக்காட்டினாராம். இதைக்கேட்டு அவர்கள் அதிர்ந்து போனதாக கூறப்படுகிறது.
News January 19, 2026
திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்தார்

தேர்தல் வரவுள்ளதால், மாற்றுக்கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் கொண்டுவர திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகள் போட்டி போட்டு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் இணைக்கும் படலம் தொடர்கிறது. அந்த வகையில், இன்று கோவை, ஆனைமலை மேற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர், எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.


