News November 19, 2024

சபரிமலையில் அலைபோதும் கூட்டம்: போலீசார் குவிப்பு

image

பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கடந்த சில நாள்களாக அங்கு வருவதால் போதிய பாதுகாப்பை உறுதி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்ட போலீசார் சன்னிதானத்தில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க அனுபவம் பெற்ற சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 19, 2026

சாதி இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும்: நாதக வாக்குறுதி

image

நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், *சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும். *தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி. *மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை. *நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் உள்ளிட்ட <<19423818>>பல வாக்குறுதிகள்<<>> இடம் பெற்றுள்ளன.

News March 19, 2026

சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணியா?

image

சசிகலாவுடன் இணைந்து ராமதாஸ் தரப்பு தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி முட்டுக்கட்டை போட்டார். திமுக கூட்டணியில் இணையவும் ஆதரவாளர்கள் விரும்பாததால், தவெகவுடன் கூட்டணி வைக்க பலர் ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவுடன் இணைந்து வட மாவட்டங்களில் 40 இடங்களில் நிற்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளாராம்.

News March 19, 2026

சற்றுமுன்: விலை ₹10,000 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் இன்று மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹10 குறைந்து ₹265-க்கும், கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11-ம் தேதி கிலோ வெள்ளி ₹3,00,000-க்கு விற்பனையான நிலையில், 8 நாள்களில் ₹35,000 குறைந்துள்ளது.

error: Content is protected !!