News October 1, 2025
விக்கிபீடியாவுக்கு போட்டியாக களமிறங்கும் ‘க்ரோக்கிபீடியா’

தகவல்களை அள்ளி கொடுக்கும் விக்கிபீடியாவுக்கு போட்டியாக எலான் மஸ்க் ‘க்ரோக்கிபீடியா’ என்ற புதிய AI தகவல் தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இந்த புதிய தளம், இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை க்ராக் AI மூலம் அனலைஸ் செய்து, உடனடியாக நம்பகமான தகவல்களை பயனர்களுக்கு கொடுக்குமாம். இதற்கு மக்களின் ஆதரவு தேவை என எலான் மஸ்க் கேட்டுள்ளார். இதை ’ரிச்சிபீடியா’ என அழைக்கலாமா என சிலர் கிண்டலடித்துள்ளனர்.
Similar News
News October 1, 2025
பிரசாந்த் கிஷோரின் 7 தேர்தல் வாக்குறுதிகள்

பிஹாரில் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள பிரசாந்த் கிஷோர், தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். *60 வயதை தாண்டிய அனைவருக்கும் மாதம் ₹2,000. * புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என புதிய துறையை உருவாக்கி, வேலைவாய்ப்பு வழங்கப்படும். *அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் வரை, தனியார் பள்ளிகளில் இலவச கல்வி. *ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்பன உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
News October 1, 2025
ஜிவி பிரகாஷுக்கு அன்பளிப்பு கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் பரிசு கொடுத்துள்ளார். ‘வாத்தி’ படத்திற்காக ஜிவி பிரகாஷ் 2-வது முறையாக தேசிய விருது வென்ற நிலையில், அவருக்கு தான் பயன்படுத்திய வெள்ளை நிற பியானோவை ஏ.ஆர்.ரஹ்மான் தந்துள்ளார். இது தனது வாழ்நாளில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு என்றும், இதை விட சிறந்த பரிசு ஒன்றை எதிர்பார்க்க முடியாது எனவும் x-ல் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
News October 1, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. ரூல்ஸ் மாறுது!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விதிமுறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் ₹8,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ₹1,000 பெறுபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பிக்க முடியாத சூழல் உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.