News April 8, 2025
விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்: அமைச்சர்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். வங்கிகளில் நேரில் விண்ணப்பித்தால், ஒரு வாரத்திற்குள் கடன் வழங்கும் நடைமுறை தற்போது இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பித்த அன்றே கடன் வழங்கும் முறை தொடங்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 7, 2025
நிலைப்பாட்டை மாற்றிய EPS: செங்கோட்டையன்

தனது நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றியவர் EPS என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆட்சியை நடத்த தடுமாறியபோது OPS-ஐ அழைத்து வந்த EPS-தான், தற்போது அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார் எனவும், தான் CM-ஆக வழிவகை செய்த சசிகலாவையே கொச்சையாக பேசினார் என்றும் விமர்சித்துள்ளார். MP தேர்தலில் உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் பணம் செலவழிப்பவர்களுக்கே EPS சீட் வழங்கினார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News November 7, 2025
தெருநாய்கள் வழக்கு: அரசுக்கு கெடுபிடி! 1/2

*உள்ளாட்சி அமைப்புகள் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது சோதனை செய்ய வேண்டும் *பிடித்த தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது *சாலைகளில் திரியும் விலங்குகளை அகற்ற நெடுஞ்சாலை ரோந்து குழுவை அமைக்க உத்தரவு *அனைத்து மாநில அரசுகளும் இதை உறுதியாக கடைபிடித்து, 8 வாரங்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
News November 7, 2025
தெருநாய்கள் வழக்கு: SC-ன் உத்தரவுகள் இதோ! 2/2

தெருநாய்கள் வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. *பள்ளி, கல்லூரிகள், ஹாஸ்பிடல் பகுதிகளுக்குள் தெருநாய்கள் நுழைவதை தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் *அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன பகுதிகளுக்குள்ளும் நாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும் *மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் ஆணை *இதை ஒரு அதிகாரியை நியமித்து கண்காணிக்க உத்தரவு.


