News June 28, 2024
குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு

தமிழக அரசு, 3 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவித்துள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டெல்டாவில் குறுவை சாகுபடி அறுவடையின்போது பெரும்பாலும் மழைக்காலமாக இருப்பதால் பெருமளவு இழப்பீடு வழங்க வேண்டியிருந்தது. இதனால் 3 ஆண்டுகளாக தனியார் காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு வழங்க முன்வராமல் இருந்தன. இந்நிலையில், அரசு பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு கண்டுள்ளது.
Similar News
News January 9, 2026
பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகள் இவையே!

<<18785984>>NDA கூட்டணியில்<<>> பாமகவுக்கு 17 (அ) 18 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் இதோ! திருப்போரூர், காஞ்சி, செஞ்சி, விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, விருத்தாச்சலம், நெய்வேலி, கும்மிடிப்பூண்டி, சோளிங்கர், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பெண்ணாத்தூர், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, வானூர், பூம்புகார்.
News January 9, 2026
மக்கள் நாயகன் மறைந்தார்.. கண்ணீர் அஞ்சலி

தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக போராட்டக் களம் புகுந்த <<18808501>>மக்கள் நாயகன்<<>> வன்னிக்காளை(92) இன்று காலமானார். திண்டுக்கல்லைச் சேர்ந்த அந்த காந்தியவாதியின் உடலுக்கு கண்ணீருடன் மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, வன்னிக்காளையின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த விடுதலை வீரன் உலகை விட்டு மறைந்திருந்தாலும், மக்களின் உள்ளங்களில் இருந்து ஒருபோதும் நீங்குவதில்லை. SALUTE
News January 9, 2026
டைஃபாய்டு காய்ச்சல் வர என்ன காரணம்?

<<18811832>>டைஃபாய்டு <<>>காய்ச்சல் என்பது ‘சால்மோனெல்லா டைஃபி’ (எஸ். டைஃபி) என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும். இது சிறுகுடலை பாதித்து அதிக காய்ச்சல், வயிற்று வலி உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சுகாதாரமற்ற உணவு, கழுவப்படாத பழங்கள் & காய்கறிகள் மற்றும் அசுத்தமான குடிநீரை குடிப்பது உள்ளிட்டவை டைஃபாய்டு பரவலுக்கான முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, உணவு, குடிநீரில் அதிக கவனம் செலுத்துங்கள் மக்களே!


