News August 11, 2025
இன்று வங்கிக் கணக்கில் பயிர்க் காப்பீட்டு தொகை

PM ஃபசல் பிமா திட்டத்தின் கீழ், பயிர்க் காப்பீடு தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இன்று டெபாசிட் செய்யப்படும். இதற்காக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ₹3,200 கோடி தொகையை விடுவிக்கிறார். நாடு முழுவதும் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் இத்திட்டத்தில், அதிகபட்சமாக ம.பி.,க்கு ₹1,156 கோடி, ராஜஸ்தானுக்கு ₹1,121 கோடி, சத்தீஸ்கருக்கு ₹150 கோடி, இதர மாநிலங்களுக்கு ₹773 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
அம்பேத்கர் பொன்மொழிகள்

*மற்றவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால், அந்த நற்பெயர் உனக்கு வேண்டாம். *வெற்றியோ தோல்வியோ எது வரினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான். *அறிவைத் தேடி ஓடுங்கள்; நாளைய வரலாறு உங்கள் நிழலாகத் தேடி ஓடிவரும்.
News August 11, 2025
2 Voter ID வைத்திருந்த துணை முதல்வர்.. ECI நோட்டீஸ்

தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், வரும் 14-ம் தேதிக்குள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிஹாரில் சமீபத்தில் தான் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) செய்யப்பட்டது.
News August 11, 2025
இந்த முறை கப் நமக்கு தான்: கங்குலி

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். துபாய் ஆடுகளங்களில் இந்தியாவை வீழ்த்துவது கடினமான விஷயம் எனவும், கோலி, ரோஹித் ODI-களில் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்திருப்பதால், அவர்களுக்கு BCCI தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், கில் எதிர்காலத்தில் ரசிகர்களின் நம்பிக்கையை சுமந்து செல்லும் கேப்டனாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.