News July 25, 2024

குரோஷியா ஓபன்: காலிறுதியில் யூகி பாம்ப்ரி தோல்வி

image

குரோஷியா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது. யூகி பாம்ப்ரி – அல்பானோ ஜோடி, பிரான்சின் மானுவல் கினார்டு – கிரிகோரி ஜாக் ஜோடியை எதிர்கொண்டது. இதில், முதல் செட்டை பிரான்ஸ் ஜோடி 6-4 என கைப்பற்றியது. 2ஆவது செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 6-1 என்று கைப்பற்றியது. இறுதி செட்டை பிரான்ஸ் ஜோடி 10-6 என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறியது.

Similar News

News March 28, 2026

காங்கிரஸில் இணைந்தார் GKM தமிழ்க்குமரன்

image

பாமக கெளரவத் தலைவர் GK மணியின் மகனான தமிழ்க்குமரன், டெல்லியில் KC வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பாமக ராமதாஸ் அணியின் இளைஞரணி தலைவராக இருந்த தமிழ்க்குமரன், தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளது அக்கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டால், அங்கு அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

News March 28, 2026

போட்டி தொடங்கும் முன்பே.. RCB-க்கு SHOCK

image

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று IPL 2026 சீசன் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் RCB உடன் SRH அணி மோதுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக RCB வீரர் ஜோஸ் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் மற்றொரு வீரரான நுவான் துஷாராவும் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கெனவே தனிப்பட்ட காரணங்களால் யாஷ் தயாள் இந்த சீசனிலிருந்து வெளியேறினார்.

News March 28, 2026

BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

image

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக டி.வி.பாலமுருகன் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வெளியான வேட்பாளர் பட்டியலில் ஆத்தூரில் விஸ்வநாதன் என்பவர் போட்டியிடுவார் என EPS அறிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த டி.வி.பாலமுருகன், அதிமுகவில் இருந்து விலகி, ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.TNElection2026

error: Content is protected !!