News April 14, 2024
அதிமுகவை விமர்சிப்பவர்கள் காணாமல் போவார்கள்

அதிமுகவைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். ஆத்தூர் பிரசாரத்தில் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட, நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குரல் கொடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், விளம்பரம் தேவை என்பதற்காக, ஒற்றை செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றி வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
Similar News
News December 31, 2025
ஜன 6-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஜன.20-ல் தொடங்க உள்ளது. 2026 தேர்தலுக்கு முன்னதாக கூடும் கடைசி கூட்டத்தொடர் இது என்பதால், எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக ஆலோசனை நடத்த, ஜன.6-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. CM ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், இடைக்கால பட்ஜெட் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 31, 2025
3 நாள்களில் தங்கம் விலை ₹4,400 குறைந்தது

தங்கம், வெள்ளியின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவந்த நிலையில், தற்போது சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி, கடந்த 3 நாள்களாக 1 சவரன் தங்கத்தின் விலை ₹4,400 குறைந்து, தற்போது ₹1,00,400-க்கு விற்பனையாகி வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ₹27,100 வரை குறைந்து, தற்போது ₹2,57,900-க்கு விற்பனையாகி வருகிறது. பொங்கல் வரை தங்கம், வெள்ளியின் விலை படிப்படியாக குறையலாம் என வணிகர்கள் சொல்கின்றனர்.
News December 31, 2025
விஜய்யை மறைமுகமாக சாடிய வானதி

NDA கூட்டணி பலமாக இல்லை என்று கருத்துருவாக்கம் செய்யப்படுவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். திமுகவை வீழ்த்த NDA-வில் தற்போது இருக்கும் கட்சிகளே போதும் என சொல்ல மாட்டேன் என்ற அவர், அதிமுக-பாஜக கூட்டணியால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் எனவும் கூறியுள்ளார். மேலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சொல்பவர்களால் அதை தனியாக செய்யமுடியுமா என்பதும் சந்தேகமே என கூறி விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார்.


