News August 23, 2025
TVK மீது பாயும் விமர்சனங்கள்.. React செய்த விஜய்

தவெகவின் மதுரை மாநாட்டுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அளவு பேரன்பு காட்டும் நபர்களை உறவுகளாக பெற என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை என பதிவிட்ட அவர், தவெக மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம் எனவும் அல்லவையை புறந்தள்ளி புன்னகைப்போம் எனவும் பதிவிட்டுள்ளார்.
Similar News
News August 24, 2025
ஓய்வறையில் கம்பீருக்கு வேற முகம்: ரிங்கு சிங்

இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மைதானங்களில் எப்போதும் ஆவேசத்துடன் காணப்படக் கூடியவர். அவர் ஓய்வறையில் எவ்வாறு இருப்பார் என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். அதில் ஓய்வறையில் கம்பீர் ஜாலியான பாடல்களை கேட்டு உற்சாகமாக இருப்பார் என்றும், அனைவரையும் ஒரே வைப்பில் வைத்து கொள்வதில் கெட்டிக்காரர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சீனியர் வீரர்களுடன் ஜாலியாக பழகும் தன்மை கொண்டவர் என தெரிவித்துள்ளார்.
News August 24, 2025
வரலாறு காணாத வசூல் செய்த மஹா அவதார் நரசிம்மா

மஹா அவதார் நரசிம்மா திரைப்படத்தின் வசூல் குறித்து hombale films அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 5வது வாரத்திற்குள் நுழையும் மஹா அவதார் நரசிம்மா திரைப்படம் இதுவரை உலகளவில் ₹278 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் வெளிவந்த ஒரு அனிமேஷன் திரைப்படத்தின் வரலாறு காணாத வசூல் சாதனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 24, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.