News August 22, 2025
சிறுபான்மையினருக்கு நெருக்கடி: CM ஸ்டாலின்

சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக CM ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசு வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் கூட்டம் நெடுநாள் இருக்காது என்றும் அவர் எச்சரித்தார்.
Similar News
News March 24, 2026
டிரம்ப்பின் மூக்கை உடைத்த ஈரான்

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதால் <<19457456>>5 நாள்கள்<<>> தாக்குதலை நிறுத்துவதாக டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று ஈரான் மறுத்துள்ளது. நிதி, எண்ணெய் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து தப்பவே டிரம்ப் இப்படி போலி செய்திகளை பரப்புகிறார் என கூறிய ஈரான் சபாநாயகர் கலிபாஃப், எச்சரிக்கைக்கு டிரம்ப் பணிந்துவிட்டார் எனவும் விமர்சித்துள்ளார்.
News March 24, 2026
BREAKING: கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது தவெக

கூட்டணிக்காக மீண்டும் திருமாவளவனுக்கு தவெக தரப்பு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக – விசிக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையில், 10+1(ராஜ்யசபா) சீட் வழங்க வேண்டும் என விசிக நிர்வாக குழு கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், போதிய சீட், உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் திருமாவிடம் தவெகவினர் பேசியதாக கூறப்படுகிறது.
News March 24, 2026
வெடித்த புதிய சர்ச்சை.. ECI அறிக்கையில் பாஜக சீல்

5 மாநிலங்களுக்கான தேர்தல் பணி ஒருபுறம் தீவிரமாகியுள்ள நிலையில், மறுபுறம் பாஜகவின் கிளை அமைப்பு போல் ECI செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் உள்ள கட்சிகளுக்கு ECI அனுப்பிய அறிக்கையில், பாஜகவின் முத்திரை இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து, அது முற்றிலும் கவனக்குறைவால் ஏற்பட்ட அலுவலக தவறு என்று கேரளா தேர்தல் ஆணைய அலுவலகம் விளக்கமளித்துள்ளது.


