News March 30, 2024
225 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள்

225 மக்களவை எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆய்வு செய்தது. அதில் 225 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதும், அதில் 29% பேர் மீது கொலை, கொலை முயற்சி, இனக் கலவரம் தூண்டியது, கடத்தல் என கடுமையான வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
அதிமுக + தவெக கூட்டணி.. முடிவை தெரிவித்தார்

விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அதிமுக, தவெக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள், அதிமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
விஜய்க்கு மகன் கொடுத்த அதிர்ச்சி

இனிஷியலை மாற்றி விஜய்க்கு அவரது மகன் ஜேசன் சஞ்சய் அதிர்ச்சி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கீதா விவாகரத்து பிரச்னை புயலை கிளப்பிவரும் நிலையில், தான் இயக்கி வரும் ‘சிக்மா’ படம் குறித்த ஃபைல்ஸில் JASON SANJAY S என்றே அவர் குறிப்பிடுவதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. அம்மா சங்கீதாவின் பெயரையே இனிஷியலாக அவர் வைத்திருப்பதாக பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமில்லை.
News March 13, 2026
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்வு

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை மேலும் ₹3,000 உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ₹12,000 வழங்கிவரும் நிலையில், தற்போது 15,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகார அடையாள அட்டை உள்ளவர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும், வீட்டு வசதி வாரியத்தில் பத்திரிகையாளர்களுக்கு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.


