News August 6, 2024

கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீவைப்பு

image

வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மோர்தாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வெடித்தப் போராட்டம் கலவரமாக மாறியது. இதனால், ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பிய நிலையில், அவரது கட்சியினரின் வீடுகளை போராட்டக்காரர்கள் சூறையாடி வருகின்றனர்.

Similar News

News March 14, 2026

திருவாரூர்: ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 14, 2026

பெட்ரோல் பங்க்குகளில் மண்ணெண்ணெய்

image

வளைகுடா போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மண்ணெண்ணெய் விற்பனைக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையகங்களில் தலா 2,500 லிட்டர் மண்ணெண்ணெயை ஒரு மாத காலத்துக்கு சேமித்து வைக்கவும் அனுமதி அளித்துள்ளது.

News March 14, 2026

BREAKING: வைரமுத்துவுக்கு ஞான பீட விருது

image

கவிஞர் வைரமுத்துவுக்கு இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞான பீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு எனப் போற்றப்படும் ஞான பீட விருது, தமிழ் மொழியில் அகிலன், ஜெயகாந்தன் ஆகியோருக்கு மட்டுமே கிடைத்திருந்தது. தற்போது, 12 கவிதை தொகுப்புகள், 10 நாவல்கள், 2 ஆராய்ச்சி கட்டுரைகளை வைரமுத்து நிறைவு செய்துள்ள நிலையில், வாழ்நாள் இலக்கிய பங்களிப்பிற்காக அவர் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!