News July 3, 2024
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அதிர்ச்சி

விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்தது, தனக்கு அதிர்ச்சியளிப்பதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்காக 10-15 ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி KING என பெயர் எடுத்தவர்கள் எனவும், அவர்களுக்கு மாற்று வீரர்களை தேர்ந்தெடுப்பது சவாலான காரியம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கோப்பையை வென்ற பிற்கு ஓய்வை அறிவித்தது நெகிழ்ச்சியான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 21, 2025
GALLERY: தாதா சாகேப் பால்கே விருது வென்ற தமிழர்கள்!

இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுதான் தாதா சாகேப் பால்கே விருது. 1969 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரை 49 பேர் வென்றுள்ளார். அதில் 3 பேர் மட்டுமே தமிழர்கள் ஆவர். அவர்கள் யார் என்பதை பார்க்க மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணுங்க!
News September 21, 2025
ஜிஎஸ்டி தாக்கத்தால் சிலிண்டர் விலை குறையுமா?

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நாளை அமலாகும் நிலையில், பல பொருள்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சமையல் சிலிண்டரின் விலை குறையுமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டருக்கு 5%, வணிக சிலிண்டருக்கு 18% ஜிஎஸ்டி வரிகள் உள்ளன. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹905-க்கு விற்கப்படுகிறது. இந்த விலையே சில நாள்களுக்கு தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
News September 21, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா?

அக்.20-ல் திங்களன்று தீபாவளி வருவதால் 3 நாள்கள் தொடர் விடுமுறை. இந்நிலையில், கடந்த ஆண்டைபோல் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்குமாறு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடைசி நேரத்தில் அறிவிக்காமல், முன்னரே அறிவித்தால் ஊர்களுக்குச் செல்ல டிக்கெட் புக்கிங் செய்ய வசதியாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை பரிசீலித்து அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. SHARE IT.