News March 24, 2025
அப்பா ஆனார் கிரிக்கெட் வீரர் KL ராகுல் ❤️❤️

பெண் குழந்தைக்கு தந்தையாகி இருப்பதாக KL ராகுல், தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருப்பதை அண்மையில் உறுதிப்படுத்தி இருந்த அவர், இன்று நடைபெறும் ஐபில் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடவில்லை. இதனை வைத்து சில யூகங்கள் சோஷியல் மீடியாவில் வலம்வந்தன. இந்நிலையில், அதியா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக KL ராகுல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
நிலவே நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸை வெகுநாள்களாக படத்தில் காண முடியவில்லை என்றாலும், அவ்வப்போது இன்ஸ்டாவில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஊதா நிற உடையில், அவரது பொன் சிரிப்புடன் அவர் கொடுத்திருக்கும் போஸ், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உங்களுக்கும் இவரது போட்டோஸ் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News December 11, 2025
சமையலறை ஆயுதங்களோடு பெண்கள் வரவேண்டும்: மம்தா

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால், சமையலறையில் உள்ள ஆயுதங்களை (பாத்திரங்கள்) கொண்டு பெண்கள் போராட வேண்டும் என மேற்கு வங்க CM மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார். பெண்களா (அ) பாஜகவா, யார் சக்தி வாய்ந்தவர்கள் என தான் பார்க்க விரும்புவதாகவும் கூறினார். SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மம்தா, தேர்தலில் பாஜக பணத்தை பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.
News December 11, 2025
மழை மற்றும் குளிர்கால உணவுகள்

மழை மற்றும் குளிர்காலத்தில் உடல் சூட்டைத் தக்கவைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சூடான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. சில ஸ்நாக்ஸ் வகைகளையும் என்ஜாய் செய்யலாம். அவை என்னென்ன உணவுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


