News August 7, 2025
யாருக்காகவும் கிரிக்கெட் நிற்காது: கங்குலி

டெஸ்ட், டி20 -களில் ஓய்வு அறிவித்த வீரர்கள் ODI-ல் விளையாடுவார்களா என்பது குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் யாருக்காகவும் நிற்காது எனவும், கவாஸ்கர் சென்ற பிறகு சச்சின் வந்தார், டிராவிட், சேவாக், லக்ஷ்மனுக்கு பிறகு கோலி உதித்தெழுந்தார். தற்போது ஜெய்ஸ்வால், பண்ட், கில் இருக்கின்றனர். உள்ளூர் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் வலுவாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 3, 2026
அரக்கோணத்தில் அதிரடி கைது!

ராணிப்பேட்டை: மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னையை நோக்கி செல்லும்ரயில்களில் மர்மநபர்கள் சிலர் போதை மாத்திரை கடத்திவருவதாக அரக்கோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் போதை மாத்திரை இருந்தது தெரிய வந்ததும் ஆகாஷ்(23), மணிகண்டன்(24), தட்சிணாமூர்த்தி(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News March 3, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 2 நாள்களில் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $20 (இந்திய மதிப்பில் ₹1,831) குறைந்து $5,352.60-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $5 குறைந்து $90.36-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News March 3, 2026
World Dosa day: தோசை உருவான வரலாறு தெரியுமா..?

வாரத்தில் 7 நாள் தோசை கொடுத்தாலும் சாப்பிடுவேன் என சொல்லும் ஆள்கள்தான் அதிகம். இன்று உலக தோசை தினம். சரியாக முதன்முதலில் எப்போது, எங்கு தோசை உருவானது என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் தோசை போன்ற ஒரு உணவின் குறிப்பு இடம்பெறுகிறது. அதே போல, 7-ம் நூற்றாண்டில் உடுப்பியின் கோயில் பகுதிகளில் தோசை உருவானதாக சொல்லப்படுகிறது. உங்களுக்கு பிடித்த தோசை வகையை கமெண்ட் பண்ணுங்க!


