News April 16, 2024
கடன்: வங்கிகளுக்கு RBI புது உத்தரவு

கடன் கட்டணங்கள் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அக்.1 முதல் அளிக்க வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் RBI உத்தரவிட்டுள்ளது. அதில், கடனுக்கு ஒரு ஆண்டு முழுவதும் வசூலிக்கப்படும் கட்டணம், கடன் மீட்பு கொள்கைகள், பிறரிடம் கடனை ஒப்படைப்பது தொடர்பான விவரங்களும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்க RBI இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
Similar News
News November 10, 2025
துரைமுருகன் அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தயாளு

கருணாநிதி எவ்வளவோ கூறியும் 1971 தேர்தலில் தான் போட்டியிட மறுத்ததாக துரைமுருகன் கூறியுள்ளார். அதன்பின், தன்னிடம் தயாளு அம்மாள், ஏன் சீட் வேண்டாம் என மறுக்கிறாய்; தேர்தல் செலவை பற்றி நீ கவலைப்பட வேண்டாம்; முதலில் நீ தேர்தலில் நில் எனக் கூறியதோடு, ₹10,000 கொடுத்தார். தான் அரசியலில் இவ்வளவு உச்சத்தில் இருக்க பிள்ளையார் சுழிபோட்டது ஸ்டாலின் தாயார் தயாளுதான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
சற்றுமுன்: நடிகை த்ரிஷா வீட்டில் பரபரப்பு

ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் த்ரிஷா வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அண்மை காலமாக சினிமா நட்சத்திரங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
News November 10, 2025
கடலில் மூழ்கிய படகு; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்

மியான்மரின் புத்திடாவுங்கிலிருந்து 300 குடியேறிகளுடன் புறப்பட்ட படகு தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே கடலுக்குள் மூழ்கியது. இச்சம்பவத்தால் 7 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி மாயமானது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல 2021-ல் மலேசியாவில், புலம்பெயர்ந்தோர் சென்ற கப்பல் மூழ்கியதால் 20 பேர் இறந்தனர்.


