News April 3, 2024
இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு

கடந்த ஆண்டு ஜூன் – டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டு பயன்பாடு 11% அதிகரித்து ரூ.9.30 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. மொத்த பரிவர்த்தனைகள் 21% அதிகரித்து 178 கோடியாக இருந்தது. அதே நேரம் ஏடிஎம் கார்டு பயன்பாடு 34% சரிந்து 115 கோடியாக இருந்துள்ளது. கடந்த டிசம்பரில் மட்டும் 9.79 கோடி புதிய கிரெடிட் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 71% தனியார் வங்கி கார்டுகள் ஆகும்.
Similar News
News February 10, 2026
E-Pantry.. ரயில் பயணிகளுக்கு சூப்பர் செய்தி

IRCTC இப்போது ரயில் பயணிகளுக்காக E-Pantry என்ற ஆன்லைன் உணவு முன்பதிவு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை முதலில் 25 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்திலோ அல்லது அதற்கு பின்னரோ ஆன்லைனில் உணவு மற்றும் தண்ணீரை ஆர்டர் செய்யலாம். பயணத்தின்போது அவர்களுக்கு இருக்கைக்கு வந்தே உணவு வழங்கப்படும்.
News February 10, 2026
ராசி பலன்கள் (10.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 10, 2026
காங்கிரஸ் யாருடன் கூட்டணி? மீண்டும் ராகுல் ஆலோசனை

ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட காரணங்களால் திமுக, காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ராகுல் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூட்டணி குறித்து தமிழக தலைவர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கருத்துக்கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.


