News August 26, 2024
கண்களை மூடினாலும் பார்க்கும் திறன் கொண்ட உயிரினங்கள்

இயற்கையின் படைப்பை நினைத்தால், நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இயற்கையின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விதமான ஆச்சரியம்தான். அந்த வகையில், இமைகளை மூடினாலும் பார்க்கும் திறன் கொண்ட உயிரினங்களை உங்களுக்கு தெரியுமா? அது எப்படி சித்தப்புனு கேக்குறீங்களா? ஒட்டகம், ஆக்டோபஸ், ஆந்தை, வெளவால், Armadillo உள்ளிட்ட உயிரினங்கள் கண்களை மூடி இருந்தாலும் எளிதாக பார்க்கும். ரொம்பவே ஆச்சரியா இருக்குல. Share it.
Similar News
News November 25, 2025
விசிகவே ஒரு பல்கலை தான்: திருமாவளவன்

அம்பேத்கர் கனவை சிதைப்பதே பாஜகவின் நோக்கம் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். வெயில், மழை பாராது பொருளில்லாமல் மந்தைகளை போல் மக்கள் காத்துக் கிடக்கும் போக்கு கொண்ட அரசியல் மாற வேண்டும் என்றார். எனவே, ஒவ்வொருவரும் அரசியலில் தெளிவுபெற வேண்டும் என்ற திருமா, அதற்காக கல்லூரி செல்ல வேண்டியதில்லை, ஏனென்றால் விசிகவே ஒரு பல்கலை தான் என குறிப்பிட்டார். உங்கள் கருத்து என்ன?
News November 25, 2025
‘விஷால் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை’

லைகா தொடர்ந்த வழக்கில், கடனாக பெற்ற ₹21.29 கோடியை 30% வட்டியுடன் திருப்பி செலுத்த விஷாலுக்கு சென்னை HC தனி நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், வட்டி மட்டுமே ₹40 கோடி செலுத்தும் அளவு விஷால் பெரிய பணக்காரர் அல்ல என வாதிடப்பட்டது. அப்படியானால், விஷாலை திவாலானவர் என அறிவிக்க தயாரா என HC அமர்வு கேள்வி எழுப்பியது. தனி நீதிபதியின் உத்தரவுக்கும் HC தடை விதித்தது.
News November 25, 2025
UK-ல் இருந்து லட்சுமி மிட்டல் வெளியேறுகிறாரா?

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டல், UK-வில் எஃகு உருக்கு தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். இன்று உலகின் 104-வது செல்வந்தராகவும் உள்ளார். இந்நிலையில், UK-வில் குடும்ப தொழிலை வாரிசுகளுக்கு கைமாற்றினால் வாரிசு வரி உள்பட தொழிலதிபர்களுக்கான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், UK-வை விட்டு வெளியேறி, துபாயில் குடியேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அவருக்கு மாளிகை ஒன்றும் உள்ளதாம்.


