News March 31, 2025
தொழில்நுட்பத்தால் உயிர் பிழைக்கும் பேருயிர்கள்

கோவை – பாலக்காடு ரயில் வழித்தடத்தில் கடந்த 27 மாதங்களாக யானைகள் ஏதும் உயிரிழக்கவில்லை என்று ரயில்வே நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அடர்ந்த காடுகளைக் கொண்ட இந்த வழித்தடத்தில் அவ்வப்போது யானைகள் ரயிலில் அடிபடுவதுண்டு. அதனை தடுக்கும் வகையில், அதிநவீன கேமரா கோபுரங்கள் உள்ளிட்டவற்றுடன் எடுக்கப்பட்ட தொழில்நுட்ப நடவடிக்கைகள் பலனளித்துள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.
Similar News
News January 15, 2026
சற்றுமுன்: கூட்டணி முடிவை கூறினார் ஓபிஎஸ்

கூட்டணி பற்றி கேட்டாலே தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓபிஎஸ் கூறி வந்தார். இன்று தை முதல் நாள் என்பதால் கூட்டணி பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘தை மாதத்தில் 30 நாள்கள் உள்ளது, அதில் ஏதாவதொரு நாளில் அறிவிப்பேன்’ என மீண்டும் OPS சஸ்பென்ஸ் வைத்துள்ளார். அப்போது, ‘சீக்கிரம் முடிவை சொல்லுங்கள், தினம் தினம் செத்து பிழைக்கிறோம்’ என அங்கிருந்த ஒருவர் கூற, சிரிப்பலை எழுந்தது.
News January 15, 2026
சாப்பிட்ட பிறகு வயிறு வலிக்குதா? உஷார் மக்களே!

சாப்பிட்ட பிறகு வயிற்றில் ஊசி குத்துவது போன்ற வலி ஏற்படுகிறதா? இது வெறும் அஜீரணமல்ல; பித்தப்பை கற்களின் அறிகுறியாகவும் இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். *சாப்பிட்டதும், வலது மேல் வயிறு அல்லது மேல் முதுகில் வலி, வாந்தி அல்லது குமட்டல் இருந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும். *பெண்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம். பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.
News January 15, 2026
பொங்கலுக்கு பிறகு இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

பொங்கல் முடிவடையும் ஜன.17-ம் தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையும் புதன், லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குகிறார். இதனால் ரிஷபம், துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்களின் பதவி உயர்வு பெற்று நிதி நிலைமை மேம்படும். உங்கள் காதல் அடுத்த கட்டமான திருமணத்திற்குச் செல்ல அதிக வாய்ப்புள்ளது. நல்ல சம்பளத்துடன் வேலை, நகை வாங்குதல், புதிய வீடு (அ) மனை வாங்குதல் உள்ளிட்ட சுபகாரியங்கள் நிகழும்.


