News August 25, 2024
ஆட்ட நாயகனின் அசத்தல் செயல்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற முஷ்பிகுர் ரஹீம், பரிசு தொகையை வங்தேச மக்களுக்கு வழங்கவுள்ளார். பாக்., எதிராக முதல் டெஸ்டில் 191 ரன்கள் குவித்து வங்கதேச அணியின் வெற்றிக்கு வித்திட்ட அவர், ஆட்ட நாயகனுக்காக கொடுக்கப்பட்ட தொகையை வங்கதேசத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ளதாக கூறினார். இவரின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Similar News
News November 5, 2025
எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாத கொடூரம்: சிபிஆர்

கோவை கொடூரத்தில் பாதிக்கப்பட பெண்ணுக்கு, நாம் உறுதுணையாக நிற்க வேண்டும் என துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். உண்மையிலேயே எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத கொடூரமானது கொங்கு மண்ணில் நடந்தது தாங்க முடியாத வேதனையை தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவது போலீசின் பொறுப்பு என்று சிபி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
News November 5, 2025
கோவை கொடூரத்தால் மிகுந்த வேதனை: கனிமொழி

கோவை கொடூரத்தில், குற்றம் செய்தவர்களை கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யாமல் நாம் பண்பட்ட சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியாது என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள கனிமொழி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் என்றும் கூறியுள்ளார்.
News November 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..


