News June 25, 2024
மண்டை ஓட்டில் கருவி பொருத்தி சாதனை

இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கடுமையான வலிப்பு நோயால் அவதி அடைந்து வருகிறார். அவரது வலிப்பு நோயை கட்டுப்படுத்தும் வகையில், உலகிலேயே முதல்முறையாக நியூரோஸ்டிமுலேட்டர் என்ற கருவியை சிறுவனின் மண்டை ஓட்டில் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். வலிப்பு நோய் என்பது மூளையில் ஏற்படும் அசாதாரண மின் தூண்டலாகும். இதை புதிய கருவி கட்டுப்படுத்தி, வலிப்பு நோயை 80% குறைத்துள்ளது.
Similar News
News December 12, 2025
விவேகானந்தர் பொன்மொழிகள்

*நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள். *இந்த உலகின் வரலாறு என்பது தங்களைத் தாங்களே நம்பிய ஒரு சில மனிதர்களின் வரலாறாகும். *யாரையும் குறை கூறாதீர்கள், அறிவற்றவர்கள் செய்யும் தவறைச் செய்யாதீர்கள். *உண்மையான முன்னேற்றம் என்பது மெதுவானது ஆனால் நிச்சயமானது. *நீங்கள் எல்லையற்றவர். எல்லாச் சக்தியும் உங்களிடம் உள்ளது. உங்களால் எதையும் சாதிக்க முடியும்.
News December 12, 2025
ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு முதல் பொதுத்தேர்தல் அறிவிப்பு

ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்ட வங்கதேசத்தில், 2026 பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 300 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதனுடன் அரசியல் சாசன திருத்தத்திற்கான பொது வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அந்நாட்டின் முக்கிய கட்சியான ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிட முடியாது.
News December 12, 2025
கில்லை கேப்டனாக்கியது திடீர் முடிவு அல்ல: அங்கோலா

சுப்மன் கில்லை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பது குறித்து திடீரென முடிவெடுக்கப்படவில்லை என்று EX பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் சலில் அங்கோலா தெரிவித்துள்ளார். ரோகித்துக்கு பிறகு சுப்மன் கில் தான் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர் என்று 2023-ல் பிசிசிஐ உறுதி செய்ததாகவும், அந்த வருடம் அவர் மலைபோல் ரன்கள் குவித்து சிறப்பான ஃபார்மில் இருந்ததாகவும் அங்கோலா நினைவு கூர்ந்துள்ளார்.


