News February 24, 2025
இபிஎஸ் கோட்டையில் விரிசல்.. Ex அமைச்சர்கள் ஆப்சென்ட்

சென்னையில், இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செங்கோட்டையன், தங்கமணி பங்கேற்காதது பேசுபொருளாகி உள்ளது. இபிஎஸ் சார்ந்த மேற்கு மண்டலத்தில் முக்கிய முகமாக பார்க்கப்படும் இருவரும், இபிஎஸ் மீது அப்செட்டில் இருப்பதாலேயே ஆப்சென்ட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் இன்று ஒட்டியுள்ள போஸ்டரில் இபிஎஸ் பெயரே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
Similar News
News February 24, 2025
‘சீமான்’ பெயரை கூட சொல்லாத காளியம்மாள்

நாதகவில் இருந்து விலகியது தொடர்பாக காளியம்மாள், ஒரு பக்க அளவிற்கு உருக்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். சுமார் 29 வரிகள் இருந்த அந்த அறிக்கையில் நாதகவின் பணி, அக்கட்சியின் தொண்டர்கள் செயல்பாடு, அவர்களுடன் பழகியது மற்றும் தனது குமுறலையும் உள்ளத்தில் இருந்து வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், இவ்வளவு நீண்ட நெடிய அறிக்கையில் ஒரு இடத்தில் கூட ‘சீமான்’ பெயரை கூட அவர் குறிப்பிடவில்லை.
News February 24, 2025
மளமளவென சரியும் பங்குச்சந்தை

தொடர்ந்து சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தை, இன்றும் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. நிஃப்டி இன்று 243 புள்ளிகள் சரிந்து 22,552 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. IT நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் கடும் சரிவைக் கண்டது, சந்தையின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
News February 24, 2025
அரசு ஊழியர்கள் போராட தடை!

அரசு ஊழியர்கள் நாளை போராடத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு மறுவிசாரணைக்கு வரும் வரை சாலை மறியல், பணி புறக்கணிப்பு உள்ளிட்ட எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ நாளை மாநில அளவில் போராட இருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.