News May 19, 2024
அதிமுகவுக்குள் விரிசல்?

சேலத்தில் இபிஎஸ் தனது 70ஆவது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியபோது, அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் யாரும் சேலம் செல்லவில்லை. தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. பிறகு, எக்ஸ் பக்க பதிவில் வேலுமணி வாழ்த்து தெரிவித்த போதிலும், அவர்களிடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.
Similar News
News March 9, 2026
சற்றுமுன்: விஜய் கொந்தளித்தார்

தமிழகத்தில் நடந்த 5 குற்ற சம்பவங்களை சுட்டிக் காட்டி TN அரசுக்கு விஜய் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை ஆகாஷ் மரணம், நாமக்கல் சிறுமி ரேப் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுள்ள தவெக, இது தமிழகமா (அ) சுடுகாடா என்றும் திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாகவும் சாடியுள்ளது. மேலும், ரத்த ஆறாக ஓடும் தமிழகம் இன்று கண்ணீரில் மிதக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
News March 9, 2026
திமுக ஆண்டது போதும்.. மக்கள் மாண்டது போதும்: EPS

TN-ல் தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்ற செய்திகள் அச்சத்தை அதிகரித்துள்ளதாக EPS பதிவிட்டுள்ளார். நாங்குநேரி இரட்டை கொலை முதல் தென்காசி விவசாயி கொலை வரை பட்டியலிட்ட அவர், TN-ல் திமுக ஆண்டதும் போதும் மக்கள் மாண்டதும் போதும் என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ஆட்சியில் இருக்கும் கொஞ்ச நாள்களிலாவது சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
News March 9, 2026
இன்ஸ்டாவில் தோனி – கம்பீரின் FUN CHAT!

T20I WC வெற்றியைத் தொடர்ந்து Ex கேப்டன் தோனிக்கும், கோச் கம்பீருக்கும் இடையே நடைபெற்ற இன்ஸ்டா உரையாடல் வைரலாகி வருகிறது. டீமை பாராட்டிய தோனி, ‘கோச் சாப்… உங்க முகத்தில் இருக்கும் புன்னகை அழகாக உள்ளது. சீரியஸ்னஸ் உடன் சிரிப்பு சேர்ந்தால் அது ‘கில்லர் காம்போ’ என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கம்பீர், உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.


