News August 17, 2024
உதயநிதி துணை முதல்வராக CPM கட்சி ஆதரவு

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுவதற்கு CPM கட்சி மாநிலச் செயலாளர் கேஜி பாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்த கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், உதயநிதி எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்றும், அப்படிப்பட்டவரை துணை முதல்வராக்குவதில் என்ன தவறு உள்ளது என்றும் கூறினார். அனைத்து கட்சியிலும் குடும்ப சாயல் இருப்பது இயல்புதான் என்றும் தெரிவித்தார்.
Similar News
News November 23, 2025
காரமடை அருகே விபத்து: ஒருவர் பலி

காரமடையை அடுத்த பிரஸ்காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது காரில் நண்பர் நிஷாந்த் என்பவருடன் நேற்றிரவு கட்டாஞ்சி மலை வழியாக தோலம்பாளையம் சென்றுள்ளார். தோலம்பாளையம் புதூர் அருகே கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தின் மோதியதில் கோவிந்தராஜ் பலியானார். நிஷாந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 23, 2025
விஜய்க்கு இது நல்ல பாடம்: தமிழிசை

பிஹாரில் ஜன் சுராஜுக்கு ஏற்பட்ட படுதோல்வி, விஜய்க்கும் சீமானுக்கு ஒரு பாடம் என தமிழிசை கூறியுள்ளார். பல மாநில தேர்தல்களில் வெற்றியை நிர்ணயித்துக் கொடுத்த அரசியல் விற்பன்னர் PK-வுக்கே மக்கள் துணையில்லை எனவும் வெறும் விளம்பரமோ, அலங்கார அரசியலோ வேலைக்கு ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களோடு பயணித்தால் மட்டுமே அவர்கள் உங்களை திரும்பிப் பார்ப்பார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.
News November 23, 2025
விலை கிடுகிடு உயர்வு.. மக்கள் அதிர்ச்சி

TN-ல் தக்காளி, கத்திரிக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் இன்று மொத்த விலையில் 1 கிலோ தக்காளி ₹50 – ₹60-க்கும், சில்லறை விற்பனையில் ₹80 – ₹100 வரை விற்பனையாகிறது. அதேபோல், சாம்பார் வெங்காயம் கிலோ ₹70 – ₹80, கத்தரிக்காய் ₹50 – ₹70-க்கு விற்பனையாகிறது. கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ₹58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


