News May 28, 2024

முல்லை பெரியாறில் அணை கட்ட சிபிஎம் எதிர்ப்பு

image

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியை கேரள அரசும், மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவும் கைவிட வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கேரளா அரசின் முயற்சியை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என கேட்டுக்கொண்ட அவர், தமிழக அரசு அல்லது காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி பெட்ரா பின்னே அணை கட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Similar News

News November 26, 2025

போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது

image

கொடுக்கன்குப்பத்தில் மேல்மலையனூர் எஸ்.ஐ வினதா தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு ஆலமரத்தடியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பாரதியார்,ஸ்ரீதர்,சுரேஷ் பார்த்திபன்,லோகநாதன் ஆகியோர் கஞ்சா,போதை மாத்திரைகள் விற்பவர்கள் என தெரியவந்த நிலையில் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 15 கிராம்,கஞ்சா 7 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

News November 26, 2025

சீனா விவகாரத்தில் மோடி பேசுவாரா? தமிமுன் அன்சாரி

image

அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது எனக்கூறி, இந்திய பெண் அலைக்கழிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது நம் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கு, நமது பதில் என்ன, இதுகுறித்து PM மோடி பேசுவாரா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாய் திறப்பாரா என கேள்வி எழுப்பினார்.

News November 26, 2025

விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

image

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. அதனைதொடர்ந்து டிச.1-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நாகைக்கு தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும்.

error: Content is protected !!