News August 19, 2025

திருமாவளவன் கருத்துக்கு சிபிஎம் எதிர்ப்பு

image

பணிநிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருப்பதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதுபற்றி பேசிய சிபிஎம்யை சேர்ந்த சண்முகம், 240 நாட்கள் பணிசெய்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே சட்டம் என்றும், அதனை நடைமுறைப்படுத்த தொழிற்சங்கங்கள் கூறுவதாக தெரிவித்தார். பணிபாதுகாப்புடன், வருமானமும் சேர்ந்தால் அடுத்த தலைமுறை இந்த பணியில் இருந்து விடுவிக்க உதவும் என்றார்.

Similar News

News March 4, 2026

நாட்டின் பணக்கார மாவட்டங்களின் டாப் 5 லிஸ்ட்!

image

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நாட்டில் பணக்கார மாவட்டம் எது என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தின் வரையிலான கணக்கீடாகும். இதில் எந்தெந்த மாவட்டங்கள் டாப்பில் இருக்கின்றன என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும். நீங்க மட்டும் இந்த தகவலை தெரிஞ்சிக்காம, நண்பர்களுக்கும் அதிகளவில் ஷேர் பண்ணுங்க.

News March 4, 2026

கூட்டணி முடிவு… பின்வாங்கினார்

image

தனிநபர்களுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி என்பது அனைவரை விடவும் பெரியது என மாணிக்கம் தாகூர் எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளார். கூட்டணி விவகாரத்தில் தலைமை எந்த முடிவு எடுத்தாலும், ​​அதை ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்வேன் என்ற அவர், ஒற்றுமை மிகப்பெரிய பலம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், இதுவரை திமுகவை சீண்டி வந்த மாணிக்கம் தாகூர் தற்போது பின்வாங்கியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

News March 4, 2026

சற்றுமுன்: விலை சரசரவென குறைந்தது

image

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைந்துள்ளது. நேற்று மொத்த விலையில் முட்டை ஒன்று ₹4.60-க்கு விற்பனையான நிலையில், இன்று 30 காசுகள் குறைந்து ₹4.30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக துபாய், கத்தார், ஓமன் போன்ற நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்டதால், விலை கணிசமாக சரிந்துள்ளது.

error: Content is protected !!