News March 30, 2026
CPM வேட்பாளர்கள் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை CPM வெளியிட்டுள்ளது. அதன்படி *திருவொற்றியூர் – எல்.சுந்தரராஜன், *கீழ்வேளுர் (தனி)- டி.லதா, *கந்தர்வக்கோட்டை (தனி) – எம்.சின்னதுரை, *பத்மநாபபுரம் – ஆர்.செல்லசுவாமி, பழனி – என்.பாண்டி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.<<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 10, 2026
கணவன் வெறிச்செயல்… டீச்சருக்கு கொடுமை

உ.பி.,யின் ராம்பூரில், தாம்பத்தியத்தின் போது ஏற்பட்ட சண்டையில் டீச்சரான மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது சண்டை ஏற்படும் நிலையில், சம்பவத்தன்றும் பிரச்னை வெடித்துள்ளது. கொலை செய்த கணவர், மகனை தனது தம்பி வீட்டில் ஒப்படைத்து விட்டு போதை மறுவாழ்வு மையத்தில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
News April 10, 2026
BREAKING: மளமளவென சரிந்தது.. மிகப்பெரிய தாக்கம்

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் தொடர்வதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது. அதன்படி, 17 காசுகள் சரிந்து ₹ 92.68-ஆக உள்ளது. பங்குச்சந்தை, ரூபாய் மதிப்பு நிலையற்ற தன்மையில் உள்ளதால் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்களுக்கு குழப்பம் உள்ளதாக கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தால் இறக்குமதிச் செலவு அதிகரித்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்படலாம்.
News April 10, 2026
கொசு பேட்டால் டிவிக்கு ஆபத்து

உங்கள் வீட்டில் கொசு பேட் இருக்கா? கொசு பேட்டில், கொசுவை கொல்ல ஏற்படும் தீப்பொறி, ஒரு மினி மின்காந்த துடிப்பை உருவாக்குகிறது. இது LED/OLED டிவிகளின் திரையில் உள்ள டிரான்சிஸ்டர்கள் & T-Con போர்டை சேதப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால், ஸ்கிரீனில் கருப்புக் கோடுகள்(அ)வட்டங்கள் ஏற்படலாம். சில நேரம் ஸ்கிரீன் முற்றிலும் கூட செயலிழக்கலாம். ஆகவே, டிவி அருகே கொசு பேட் பயன்படுத்துவதை தவிருங்கள். SHARE IT


