News April 6, 2025
CPIM பொதுச்செயலாளராகும் MA.பேபி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6ஆவது தேசிய பொதுச்செயலாளராக கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிபிஎம்(CPIM) மூத்த தலைவர்களில் ஒருவரான இவரது பெயரை பிரகாஷ் காரத் பரிந்துரை செய்துள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
Similar News
News April 7, 2025
3 நாள்களில் சவரனுக்கு ₹2,200 குறைந்த தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக சரிந்துள்ளது. கடந்த 3-ம் தேதி 22 கேரட் ஒரு சவரன் ₹68,480க்கு விற்பனையான நிலையில், இன்று ₹66,280க்கு விற்பனையாகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு எதிரொலியாக பங்குச்சந்தைகளில் நிலையற்றத் தன்மை நிலவுகிறது. இதனால், வரும் நாள்களிலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
News April 7, 2025
பசுவுக்கு வளைகாப்பு… 500 பேருக்கு தடபுடல் விருந்து!!

நம்மூர் மக்களுக்கு மாடுகள் மீது எப்போதும் தனி பாசம் உண்டு. கர்நாடகவில், கர்ப்பமாக இருந்த பசுவிற்கு ஒரு குடும்பம் திருமண மண்டபத்தில் வளைகாப்பு நடத்தி பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறது. இதில், கலந்து கொள்ள 500 பேருக்கு அழைப்பு விடுத்து, தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அவர்கள் சுமார் ₹1.5 லட்சம் வரை செலவிட்டதாகவும் சொல்கின்றனர். பாசத்துக்கு முன் காசு கனக்கில்லையே!
News April 7, 2025
அந்த தியாகி யார்? பேட்ஜ் உடன் வந்த அதிமுக MLAக்கள்

சட்டப்பேரவைக்கு “அந்த தியாகி யார்” என்ற வாசகத்துடன் அதிமுக MLAக்கள் பேட்ஜ் அணிந்து வந்தனர். டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ED புகார் கூறியிருந்தது. இதை அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ள அதிமுக, அந்த தியாகி யார்? என்ற புதிய முழக்கத்தை முன் வைக்க தொடங்கியுள்ளது. முன்னதாக அண்ணா பல்கலை., விவகாரத்தில் ‘யார் அந்த சார்’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.