News March 15, 2026

CPI-க்கு 5 சீட்? இன்று இறுதி முடிவு

image

TN தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – CPI இன்று 4-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் CPI வெற்றிபெற்றது. இதனால், இந்த முறை 5 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என திமுக கூறுவதால் இழுபறி நீடித்து வருகிறது. எனினும், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில், தொகுதி உடன்படிக்கை எட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 14, 2026

திமுகவின் போலி ₹8,000 கூப்பன்.. ECI-ல் குவியும் புகார்!

image

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ECI-ல் கோவை சத்யன் புகாரளித்துள்ளார். வக்காளர்களுக்கு ₹8,000 கூப்பன் வழங்குவது தேர்தல் விதிமீறல் என சுட்டிக்காட்டியுள்ள அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பல இடங்களில் திமுகவினர் போலி ₹8,000 கூப்பன் கொடுத்து பிரசாரம் செய்வதாக ECI-ல் புகார்கள் குவிகின்றன.

News April 14, 2026

அனைவருக்கும் ₹8,000 + ₹8,000.. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி

image

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் ₹8,000 கூப்பன் வழங்குவோம் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய ஸ்டாலின், ஏற்கெனவே பொங்கல் பரிசாக ₹3,000, மகளிர் உரிமைத்தொகை ₹3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை ₹2,000 என மொத்தமாக ₹8,000 வழங்கியதை போல ₹8,000 கூப்பன் நிச்சயம் வழங்கப்படும் என்றார். அதேநேரம், ₹8,000 கூப்பன் அறிவிப்பு ஊழலுக்கானது என EPS விமர்சித்து வருகிறார்.

News April 14, 2026

தமிழ்ப் புத்தாண்டில் PM மோடி வழிபாடு (PHOTOS)

image

தமிழ்ப் புத்தாண்டையொட்டி துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணன் வீட்டில் PM மோடி வழிபாட்டில் ஈடுபட்டார். அந்த போட்டோக்கள் SM-ல் வைரலாகி வருகின்றன. முன்னதாக, தனது X பக்கத்தில் தமிழில் வாழ்த்து கூறிய PM மோடி, சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

error: Content is protected !!