News April 25, 2024

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு

image

புதுக்கோட்டை சங்கன் விடுதியில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மக்கள் அளித்த புகாரையடுத்து அங்குச் சென்ற அதிகாரிகள், குடிநீர் மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக வேங்கைவயலில், குடிநீர்த் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியது மக்களை வேதனையடையச் செய்துள்ளது.

Similar News

News January 23, 2026

தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.23) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.24, கத்தரிக்காய்: ரூ.18, வெண்டைக்காய்: ரூ.20 முள்ளங்கி: ரூ.16, அவரைக்காய்: ரூ.22, கொத்தவரை: ரூ.55, பச்சைமிளகாய்: ரூ.35, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News January 23, 2026

BREAKING: திமுகவில் இணையும் டிடிவியின் வலது கரம்

image

அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி TTV தினகரன் அறிவித்துள்ளார். TTV தினகரன் அமமுகவை தொடங்கிய பிறகு அவருக்கு வலது கரம் போல் மிகவும் நெருக்கமாக இருந்தவர் மாணிக்கராஜா. மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்னும் சற்றுநேரத்தில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அமமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

News January 23, 2026

மங்காத்தா கிளைமாக்ஸ சொல்லிடாதீங்க: VP

image

அஜித்தின் ‘மங்காத்தா’ இன்று ரீ-ரிலீஸாகிறது. இதனையொட்டி, மீண்டும் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டு காட்சியளிக்கின்றன. இதனிடையே, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ஷூட்டிங்கின்போது அஜித் – விஜய் ஆகிய இருவருடனும் இணைந்து எடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அத்துடன், கிளைமாக்ஸை யாரும் சொல்லிவிடாதீர்கள் என்றும் அவரே அவரை கலாய்த்துள்ளார். நீங்க எப்போ படம் பார்க்க போறீங்க?

error: Content is protected !!