News September 14, 2024
உதயநிதி நேரில் சென்று மரியாதை

காமெடி நடிகர் கருணாகரனின் தந்தையும், மத்திய அரசின் உளவுத்துறை ஓய்வுபெற்ற அதிகாரியுமான காளிதாஸ் (77) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெறும் என கருணாகரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
மெஹுல் சோக்ஷியை நாடு கடத்த உத்தரவு

பல்வேறு வங்கிகளில் ₹13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு, வைர வியாபாரி மெஹுல் சோக்ஷி பெல்ஜியம் தப்பி சென்றார். இந்நிலையில் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அவரை பெல்ஜியம் அரசு கைது செய்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு அவரை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் உடனடியாக நாடுகடத்த சாத்தியமில்லை என தெரிகிறது.
News October 18, 2025
அதிமுகவை EPS அழித்து வருகிறார்: TTV தினகரன்

துரோகத்தின் நஞ்சு செடியாக இருந்து கட்சியை EPS அழித்து வருவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுக கட்சி என்பது EPS என்ற தனிநபரின் கட்டுபாட்டில் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் அமமுக கூட்டணி, துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மட்டுமில்லாமல், வெற்றி கூட்டணியாகவும் அமையும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
பாத்ரூமுக்கு போனுடன் செல்பவரா நீங்கள்?

பாத்ரூமுக்கு போனுடன் போவது உங்கள் கட் (Gut) ஹெல்த்தை பாதிக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். டாய்லெட்டில் நீண்டநேரம் அமர்ந்து கையில் போனை நோண்டிக் கொண்டிருப்பது குடலுக்கு அதிக அழுத்தத்தை தருவதால் மூலநோய் வரும் ஆபத்து 46% அதிகரிக்கிறதாம். ஆகவே, பாத்ரூமில் போன் பயன்படுத்துவதை குறையுங்கள். நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதுடன், தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள் என்று அறிவுறுத்துகின்றனர்.