News January 29, 2025

மத்திய அரசிடம் ரிப்போர்ட் கேட்ட கோர்ட்

image

முத்தலாக் தடை சட்டத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள், FIRகள் எத்தனை என எழுத்துப்பூர்வ அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணையின் போது கோர்ட் இவ்வாறு ஆணையிட்டுள்ளது. மூன்று முறை தலாக் கூறி, இஸ்லாமிய கணவர்கள் விவாகரத்து செய்வது 2017 முதல் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 31, 2025

சீமானின் அடுத்த மாநாடு இதுதான்..!

image

சீமான் அடுத்ததாக மலைகளின் மாநாடு, தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். திருவள்ளூரில் மரங்களின் மாநாட்டில் பேசிய அவர், தனது ஆட்சியில் மரத்தை வெட்டினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும், ஒரு சிறுவன் 10 மரங்களை நட்டு வளர்த்தால் தேர்வில் 10 மதிப்பெண்களும், 100 மரங்களை நட்டு வளர்த்தால் சிறந்த தமிழ் தேசிய குடிமகன் விருதும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News August 31, 2025

ஜெர்ஸி ஸ்பான்ஸர்ஷிப்பிற்கு ₹452 கோடி விலை

image

இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸர்ஷிப்பிற்கு BCCI ₹452 கோடி விலை நிர்ணயித்துள்ளது. 2025 முதல் 2028 வரை 3 ஆண்டுகாலத்திற்கு இந்த ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தம் போடப்படும் எனவும், 140 போட்டிகள் இதில் அடங்கும் என்றும் BCCI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, ஆன்லைன் கேமிங் தடை சட்டம் அமலானதை தொடர்ந்து, ஜெர்ஸி ஸ்பான்ஸராக இருந்த Dream 11 முன்கூட்டியே வெளியேறியது.

News August 31, 2025

ராசி பலன்கள் (31.08.2025)

image

➤ மேஷம் – தாமதம் ➤ ரிஷபம் – லாபம் ➤ மிதுனம் – அச்சம் ➤ கடகம் – பகை ➤ சிம்மம் – வரவு ➤ கன்னி – நஷ்டம் ➤ துலாம் – முயற்சி ➤ விருச்சிகம் – ஊக்கம் ➤ தனுசு – நன்மை ➤ மகரம் – வெற்றி ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – உற்சாகம்.

error: Content is protected !!