News August 14, 2024
செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

செந்தில் பாலாஜி வழக்கில் ED பதிலளிக்க ஐகோர்ட் மேலும் ஒரு வாரம் கால அவகாசம் அளித்துள்ளது. ED வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது என்ற கட்டுப்பாடுடன் ஒருவாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் ஜாமின் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 12, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 12, ஐப்பசி 26 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 AM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: மூலம் ▶சிறப்பு: காலபைரவாஷ்டமி. ▶வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்.
News November 12, 2025
நேரடி வரி வருவாய் ₹12.92 லட்சம் கோடியாக அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் 1 முதல் நவம்பர் 10 வரையிலான, நேரடி வரி வருவாய் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி வருவாய் 7% அதிகரித்து ₹12.92 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12.08 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ₹25.20 லட்சம் கோடியாக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.7% அதிகமாகும்.
News November 12, 2025
தற்கொலைப்படை தாக்குதலில் இந்தியாவின் சதி: பாக்., PM

<<18258662>>பாகிஸ்தானில் கார் வெடித்து<<>> 12 பேர் உயிரிழந்த நிலையில், இது தற்கொலைப்படை தாக்குதல் என அந்நாட்டு PM ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவின் சதி இருப்பதாகவும், ஆப்கனை தளமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் அடிமையான TTP தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்படுவதாகவும் சாடியுள்ளார்.


