News March 19, 2024
சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு

யூடியூப்பில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்குடன் தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகளை பரப்பியதால் மான நஷ்ட ஈடாக ₹1 கோடியே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் லைகா குறித்து கருத்து தெரிவிக்கவும் சவுக்கு சங்கருக்கு தடை விதித்துள்ளது.
Similar News
News November 3, 2025
மீனவர்களுக்காக CM எழுதிய கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை மீட்கக்கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொடர் கைது நடவடிக்கைகளால் மீனவ சமூகத்திடையே அச்சம் ஏற்பட்டுள்ளது என்ற அவர், தற்போதைய நிலவரப்படி 114 மீனவர்கள் இலங்கையில் மாட்டிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அனைவரும் நாடு திரும்ப உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
News November 3, 2025
‘Ra.One’ 2-ம் பாகம் உருவாகும்: ஷாருக்கான்

‘Ra.One’ படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய அனுபவ் சின்ஹா 2-ம் பாகம் எடுக்க ஆர்வம் தெரிவித்து, அதற்கான நேரம் கூடி வரும்போது, 2-ம் பாகத்தை எடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், முதல் பாகம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
News November 3, 2025
உலகையே அழிக்க போதுமான அணு ஆயுதம் இருக்கு: டிரம்ப்

இந்த உலகத்தையே 150 முறை அழிக்க போதுமான அணு ஆயுதங்கள் USA-விடம் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். USA-வுக்கு அடுத்து அதிக அணு ஆயுதங்களை வைத்திருப்பது ரஷ்யாவும் சீனாவும் தான் என கூறிய அவர், இன்னும் 5 ஆண்டுகளில் தங்களுக்கு இணையான அணு ஆயுதங்களை கொண்ட நாடாக சீனா முன்னேறிவிடும் என கூறியுள்ளார். மேலும், அணு ஆயுதக் குறைப்பு குறித்து ரஷ்யா & சீனாவிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.


