News October 24, 2024
ஜானி மாஸ்டருக்கு நீதிமன்றம் ஜாமின்

பெண் நடன இயக்குனரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜானி மாஸ்டருக்கு நம்பல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டர் தற்போது சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 3, 2026
வீட்டில் வளர்க்கக் கூடிய மூலிகை செடிகள்

உங்கள் வீட்டின் பால்கனியை எளிதாக தோட்டமாக மாற்றலாம். பெரும்பாலானோர் அழகு செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் செலுத்துவார்கள். தினசரி பயன்பாடு மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளையும் எளிதாக வளர்க்கலாம். அந்த செடிகள் சிலவற்றை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். நீங்க என்ன செடி வளர்க்க போறீங்க. கமெண்ட்ல சொல்லுங்க. SHARE IT.
News January 3, 2026
திமுகவுக்கு தகுதி இல்லை: சீமான்

இலக்கு வைத்து மது விற்கும் திமுக அரசுக்கு, போதை ஒழிப்பு பற்றி பேச தகுதி இல்லை என சீமான் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், உங்களுக்கு தெரியாமல் போதை பொருள் நாட்டிற்குள் வருகிறது என்று சொல்ல வெட்கமாக இல்லையா என்றும், போதைக்கு அடிமையாகாமல் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு அதனை விற்பீர்களா என்றும் கேட்டுள்ளார். போதையை ஒழிப்பேன் என கூறுவதெல்லாம் வேடிக்கை எனவும் விமர்சித்துள்ளார்.
News January 3, 2026
காலையில் குறைந்து மாலையில் அதிகரித்த தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாள்களாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ₹480 குறைந்திருந்த நிலையில், மாலையில் ₹640 அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹12,600-க்கும், 1 சவரன் தங்கம் ₹1,00,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


