News April 9, 2024

கவிதாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் அவர் மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகான அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Similar News

News April 7, 2026

56 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஆர்டெமிஸ் II

image

ஆர்டெமிஸ் II விண்கலத்தில் பயணித்த நாசா விண்வெளி குழு, மனிதர்கள் இதுவரை கண்டிராத நிலவின் மறுபக்கத்தை கண்டு சாதனை படைத்துள்ளனர். மேலும் பூமியிலிருந்து மனிதர்கள் பயணித்த மிக நீண்ட தூரத்திற்கான சாதனையையும் முறியடித்துள்ளது. 1970-ல் அப்பல்லோ 13 விண்கலம் 2,48,655 மைல்கள் கடந்திருந்த நிலையில், 2,52,752 மைல்களை எட்டி ஆர்டெமிஸ் II விண்கலம் முறியடித்துள்ளது.

News April 7, 2026

மன அழுத்தமும் பற்களை பாதிக்கும்!

image

சர்க்கரை உணவுகளை சாப்பிடுதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றுடன் மன அழுத்தமும் வாய் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மன அழுத்தமானது தூக்கத்தின்போது பற்களை நறநறவென தேய்க்க வழிவகுக்கும்; இது பற்களின் எனாமலை தேய்வடைய செய்யும். அதேபோன்று சர்க்கரை நிறைந்த உணவுகள் பற்களை பாதிக்கும். புகைபிடிப்பதால் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

News April 7, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 7, பங்குனி 24 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:00 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

error: Content is protected !!