News March 29, 2025
ஆபாச படம் எடுப்பதையே தொழிலாக செய்த தம்பதி

வெளிநாட்டு நிதியுதவியுடன், ஆபாசப் படம் எடுப்பதை தொழிலாக செய்துவந்த தம்பதி போலீஸில் சிக்கியுள்ளனர். நொய்டாவில் ஒரு பிளாட்டில், ஸ்டூடியோ அமைத்து, ஆபாச வீடியோக்கள் எடுத்தும், live-ல் ஆபாசமாக நடிக்கவைத்து ஸ்ட்ரீமிங் செய்தும், ஆபாச தளங்களுக்கு விற்று வந்துள்ளனர். இதற்காக மாடலிங் செய்ய ஆள் தேவை என விளம்பரம் செய்து, அப்படி வரும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளம் கொடுத்து இந்த தொழிலில் தள்ளியுள்ளனர்.
Similar News
News April 2, 2025
சம்மரில் இந்த உணவுகளை சாப்பிடுகிறீர்களா?

சம்மரில் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்சூட்டை அதிகரிக்கும் என்பதால் இறைச்சி வகைகள் குறிப்பாக சிக்கன், காடை வகைகளை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும் காய்கறிகள் இருப்பதை உறுதி செய்யுங்கள். தர்பூசணி போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை உண்ணுங்கள். மோர், இளநீர், லெமன் ஜூஸ் உள்ளிட்ட பானங்களை அருந்துங்கள். கூல்ட்ரிங்ஸ், காஃபி, டீயில் இருந்து தள்ளியே இருங்கள்.
News April 2, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.
News April 2, 2025
வக்ஃபு மசோதாவை திரும்ப பெறுக.. முதல்வர் கடிதம்

வக்ஃபு திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற உரிமை வழங்குகிறதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 1995ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசின் முடிவை திரும்பபெற வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.