News March 1, 2025
நாட்டின் GDP வளர்ச்சி 6.2% ஆக உள்ளது: SBI

2024-25 நிதியாண்டின் 3வது காலாண்டில் நாட்டின் GDP 6.2% – 6.3% ஆக இருக்கும் என எஸ்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது, 2வது காலாண்டில் (ஜூலை – செப்.) 5.6% ஆக இருந்தது. நிலையான கிராமப்புற பொருளாதாரம், ஊதிய வளர்ச்சி மற்றும் வலுவான விவசாய செயல்திறன் இந்தக் கண்ணோட்டத்தை வலுப்படுத்தியுள்ளதால் GDP 6.2% – 6.3% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார அளவை GDP தான் தீர்மானிக்கிறது.
Similar News
News March 1, 2025
அன்பு சகோதரர் ஸ்டாலின்.. ராகுல் பிறந்தநாள் வாழ்த்து

அன்பு சகோதரர் ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்ய தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். 72ஆவது பிறந்தநாள் கொண்டாடும் ஸ்டாலினுக்கு X தளத்தில் வாழ்த்து கூறிய அவர், இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு, அரசியலமைப்புக்காக உறுதியாகத் தொடர்ந்து நிற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News March 1, 2025
அதிகபட்சம் 8 செ.மீ. மழை

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமேஸ்வரத்தில் 7 செ.மீ., திருவாரூர், நாகை தலா 6 செ.மீ., செங்கோட்டை, தங்கச்சிமடம், நீடாமங்கலம் பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
News March 1, 2025
முதல்வருக்கு விஜய் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு தவெக தலைவர் விஜய் ஒரு வரியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தவெகவின் அரசியல் எதிரியாக திமுகவை விஜய் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். இந்நிலையில், X தளத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருக்கும் அவர், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.