News May 13, 2024
மீண்டும் மோடி ஆட்சியை நாடு தாங்காது: கார்கே

மோடி மீண்டும் ஆட்சியமைத்தால் தலித்துகள், தாழ்த்தப்பட்டவர்கள் அடிமைகளாக மாறுவார்கள் என கார்கே தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும் என்ற கொள்கை உடைய பாஜக, மீண்டும் ஆட்சிக்கு வருவது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற அவர், பொய்களை மட்டுமே பேசும் மோடி மீண்டும் தேவையில்லை என்றார். விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கு பதிலாக, அவர்களின் உற்பத்தி செலவை மோடி அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார்.
Similar News
News August 6, 2025
தி.மலை: அரசு வங்கியில் வேலை.. APPLY NOW

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி அப்பரண்டிஸ் பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 277 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பயிற்சியின் போது 15,000 வரை ஊக்க தொகை வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறும். <
News August 6, 2025
BREAKING: ரெப்போ வட்டியில் மாற்றமில்லை

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.5%ஆக இருந்தது. இன்றைய அறிவிப்பில் 0.5% வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், வீடு, வாகனம் கடனுக்கான வட்டியிலும் மாற்றமில்லை. வட்டி உயர்த்தப்படாததால் லோன் வாங்கியவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
News August 6, 2025
தீ விபத்தால் ரத்தானது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் இன்று ஹையாத் நட்சத்திர விடுதியில் தொடங்க இருந்தது. ஆனால் நட்சத்திர விடுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தால் செஸ் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ஒரு கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.