News April 14, 2025

ராணுவம், போலீஸ் இல்லாத நாடுகள்

image

ஐஸ்லாந்தில் நிலையான ராணுவம் இல்லை. NATO உறுப்பினர் என்பதால், தேவைப்பட்டால் USA பாதுகாப்பு வழங்கும். செலவுகள் அதிகமானதால் 1868-ல் லிச்சென்ஸ்டீன் ராணுவத்தை ஒழித்தது. அடிப்படை பாதுகாப்பிற்காக ஒரு சில காவலர்கள் மட்டுமே உள்ளனர். வாடிகனில் ராணுவம் இல்லை. போப்பாண்டவரை பாதுகாக்க சுவிஸ் காவலர்கள் மட்டுமே உள்ளனர். அன்டோராவில் ராணுவம் இல்லாததால், பாதுகாப்பை ஸ்பெயினும், ஃபிரான்சும் பகிர்ந்து கொள்கின்றன.

Similar News

News January 17, 2026

இண்டிகோ நிறுவனத்திற்கு ₹22.20 கோடி அபராதம்!

image

கடந்த மாதம் சுமார் 2,500 விமானங்களை ரத்து செய்து ஏற்படுத்திய இடையூறுகளுக்காக இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு ₹22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து 4 பேர் கொண்ட குழு விசாரணை நடத்திய நிலையில், தற்போது அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட கால அமைப்பு ரீதியான திருத்தங்களை உறுதி செய்வதற்காக, இண்டிகோ நிறுவனம் ₹50 கோடிக்கு வங்கி உத்தரவாதத்தை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News January 17, 2026

IPL திருவிழாவுக்கு சின்னசாமி ஸ்டேடியம் ரெடி!

image

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற IPL கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த பெருந்துயரத்தால் அங்கு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தாண்டு RCB-யின் IPL ஆட்டங்கள் புனேவில் நடத்தப்படும் என கூறப்பட்டது. இதனிடையே சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த KSCA வைத்த கோரிக்கையை ஏற்று, அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் சர்வதேச மற்றும் IPL போட்டிகள் அங்கு தொடர்ந்து நடைபெறும்.

News January 17, 2026

தைராய்டு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை

image

தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். குறிப்பாக சில உணவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உணவு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!