News December 3, 2024
கவுன்டவுன் ஸ்டார்ட் ஆயிடுச்சு..

சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட், நாளை விண்ணில் ஏவப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த ‘ப்ரோபா 3’ சாட்டிலைட்டுடன் ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை மாலை 4.08 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படுவதற்கான கவுன்ட்டவுன் இன்று மாலை 3.08-க்கு தொடங்கியுள்ளது. சூரியன் குறித்த ஆராய்ச்சியில் இது புது மைல் கல்லாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Similar News
News April 28, 2025
NCERT பாடநூலில் கும்பமேளா IN முகலாய வரலாறு OUT..!

மத்திய அரசின் கீழுள்ள NCERT பாடநூலில் செய்யப்பட்ட மாற்றம் சர்ச்சையாகியுள்ளது. 7-ம் வகுப்பு பாடநூலில் மகாகும்பமேளா உள்ளிட்ட புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், முகலாய மன்னர், டெல்லி சுல்தான்களின் வரலாறு நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 28, 2025
கோர விபத்தில் 5 தமிழர்கள் பலி

திருப்பதி அருகே நடைபெற்ற கோர விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். தோட்டப்பள்ளி என்ற பகுதியில் கார் ஒன்று கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News April 28, 2025
செந்தில் பாலாஜி வழக்கு முடித்து வைப்பு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி எந்த பதவியும் வகிக்கக்கூடாது என ED கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்டு, செந்தில் பாலாஜிக்கு எதிரான ஜாமின் வழக்கை முடித்து வைத்தது. SC தெளிவாக கூறிவிட்டதால், அவரின் கட்சிப் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.