News May 15, 2024

அடுத்த 2 நாளில் கவுன்சிலிங் தேதி?

image

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கவுன்சிலிங் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு, அடுத்த 2 நாட்களில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாளுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில், அதைத் தொடர்ந்து கவுன்சிலிங் நடைபெறும் தேதியை பள்ளிக் கல்வித்துறை வெளியிடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News

News August 8, 2025

சுதந்திர தின விடுமுறை: ரயில் முன்பதிவு தொடங்கியது

image

சுதந்திர தின விடுமுறையையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆக.14 சென்னை – போத்தனூர்(06027), ஆக.17 நாகர்கோவில் – தாம்பரம்(06012), ஆக.14 சென்னை எழும்பூர் – செங்கோட்டை(06089) ஆகிய சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி <>IRCTC<<>>-ல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க நீங்களும் உடனே புக் பண்ணுங்க..

News August 8, 2025

தீவிரவாதி குடும்பத்துடன் பேச அனுமதி

image

2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி தஹாவூர் ராணா, அவனுடைய குடும்பத்துடன் ஒருமுறை போனில் பேச டெல்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய வழக்கறிஞரை மாற்றிவிட்டு, புதிய வழக்கறிஞர் நியமிப்பது தொடர்பாக குடும்பத்தினருடன் பேச வேண்டும் என அவன் அனுமதி கோரி இருந்தான். தற்போது டெல்லி சட்ட சேவைகள் ஆணையத்தின் வழக்கறிஞர் பியூஷ் சச்தேவா, ராணாவிற்கு சேவை வழங்கி வருகிறார்.

News August 8, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹560 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 அதிகரித்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,470-க்கும், சவரன் ₹75,760-க்கும் விற்பனையாகிறது. இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதே கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!