News February 27, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும் வகையில், நியமன முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கப்படும். இதற்காக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நகர்ப்புற உள்ளாட்சி, ஊராட்சிகள் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News February 28, 2025
இரவில் நிம்மதியான தூக்கத்திற்கு..

நமது உடலில் சுரக்கும் மெலடோனின் என்ற ஹார்மோன்தான் நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த ஹார்மோன், இருட்டிய பின்னர்தான் சுரக்கத் தொடங்கும். அப்போது நாம் செல்ஃபோன் பார்த்துக் கொண்டு இருந்தால் இந்த ஹார்மோன் சுரக்காது. இதனால்தான், அத்தகைய வேளைகளில் நமக்கு தூக்கம் வருவதில்லை. எனவே தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்ஃபோன் பார்ப்பதை நிறுத்திவிட்டால், நிம்மதியாக தூங்கலாம்.
News February 28, 2025
வாட்டி வதைக்கும் வெயில்: ஹீட் ஸ்ட்ரோக்-க்கு உடனே சிகிச்சை

கோடை வெயிலால் ஏற்படும் வெப்ப வாதத்திற்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ➤ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள், ➤உப்பு-சர்க்கரை கரைசல், ➤குடிநீர் வசதி, ➤மருந்துகள் & தடுப்பூசிகள் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் என்ற வெப்பவாத பாதிப்புக்கு துரித சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது
News February 28, 2025
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு கட்டாயம்?

புலம்பெயர் தொழிலாளர்களால் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க, அவர்களின் பயோமெட்ரிக் பதிவை கட்டாயமாக்க அரசுக்கு 5ஆவது காவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வரும் கான்டிராக்டர்களின் பயோ மெட்ரிக்கையும் பதிவிட வேண்டும், அவர்களுக்கு வீடு அளிக்கும் உரிமையாளர்கள் அடையாள சான்றுகளை வாங்கி காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.