News August 8, 2024
தமிழக முதல்வரை சந்தித்த கவுன்சிலர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தலைமையில், நெல்லை மாநகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் மன்சூர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Similar News
News November 21, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (நவ.21) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கண்ணதாசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News November 21, 2025
நெல்லை: பாலியல் வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

நெல்லை இடிந்தகரையை சேர்ந்த அரவிந்தன் (33) என்பவர் கடந்த 2018ல் அதே ஊரைச் சேர்ந்த பெண்மணி ஒருவரை அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கூடங்குளம் போலீசார் அரவிந்தனை கைது செய்தனர். இவ்வழக்கில் மாவட்ட மகிளா நீதிபதி ராமலிங்கம் இன்று அரவிந்தனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News November 21, 2025
நெல்லை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.நெல்லை – 9445000380
2.பாளை – 9445000381
3.நாங்குநேரி- 9445000387
4.ராதாபுரம்- 9445000388
5.அம்பை- 9445000386
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


