News September 23, 2025
8 ஆண்டுகள் முன்பே வரியை குறைத்திருக்கலாமே? CM

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள GST வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கில் இருந்து செய்யப்படுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்திருந்தால், இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை சேமித்து இருக்குமே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தி திணிப்பை ஏற்க மறுப்பதற்காக தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய கல்வி நிதி மறுக்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News September 23, 2025
வெளிநாட்டில் ஆயுத உற்பத்தி தொடங்கிய இந்திய நிறுவனம்

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில், ராணுவ வாகன உற்பத்தி தொழிற்சாலையை டாடா நிறுவனம் நிறுவியுள்ளது. அந்நாட்டிற்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த தொழிற்சாலையை தொடங்கி வைக்க உள்ளார். ஒரு இந்திய நிறுவனம் வெளிநாட்டில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலையை நிறுவுவது இதுவே முதல்முறையாகும். ஆண்டுக்கு 100 போர் வாகனங்களை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
News September 23, 2025
மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

தற்காலத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு ஏற்படுவதை பார்க்கிறோம். தினம் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடுவது இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க உதவும் என்கின்றனர் டாக்டர்கள். இப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம் சத்துகள் நிறைந்திருப்பதால், BP-யை கட்டுப்படுத்த உதவும். இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு, மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 23, 2025
என்கிட்டயேவா.. தக் பதில் கொடுத்த மோகன்லால்

மோகன்லாலின் கவுண்ட்டர் பதில்களுக்காகவே அவரது நேர்காணலை பலரும் பார்ப்பதுண்டு. அப்படித்தான் தனக்கு அறிவிக்கப்பட்ட ‘தாதா சாகேப் பால்கே’ விருது குறித்தும் கலகல பதிலை அளித்துள்ளார். ஒரு நடிகருக்கான உயரிய விருதே கிடச்சாச்சு, இதுக்கு மேல சாதிக்க ஒன்னுமில்ல, இனி எதுக்கு நடிப்பை தொடருறீங்க என கேட்கப்பட்டது. அதற்கு, ஐயோ அப்டியா, எனக்கு நடிப்ப தவிர எதுவும் தெரியாது, இனி நான் என்ன செய்வேன் என பதிலளித்தார்.