News March 2, 2025
கொடி கூட ஏற்ற முடியவில்லை: திருமா வேதனை

விசிகவுக்கு 4 MLAக்கள், 2 MPக்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை என திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். விசிகவினர் கொடியேற்றும்போதுதான், அதிகாரிகள் சட்டம் பேசுவதாகக் கூறிய அவர், அதிகாரிகளை செயல்பட வைக்க அரசியல் ரீதியாக இன்னும் வலிமைப்பெற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதே வாய்ப்பாக உள்ளது என்றும் ஆதங்கப்பட்டார்.
Similar News
News March 13, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 13, 2026
எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: US

ஈரான் தாக்குதலால் ஹார்முஸ் நீரிணையில் பல்வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய எண்ணெய் சரக்கு கப்பல்கள் காத்து கிடக்கின்றன. இந்நிலையில் ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு தாங்கள் பாதுகாப்பு வழங்க முடியாது; ஈரானை தாக்குவதில் தான் தங்கள் கவனம் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக ஹார்முஸ் நீரிணையை கப்பல்கள் துணிச்சலுடன் கடந்து செல்ல வேண்டும் என US கூறிய நிலையில், தற்போது பின்வாங்கியுள்ளது.
News March 13, 2026
ஈரான் அதிபருடன் பேசிய PM மோடி

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெஷ்கியனுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பொதுமக்களின் உயிரிழப்பு & உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகம் ஆகியவை தனது முதன்மையான முன்னுரிமைகள் என்பதையும் ஈரான் அதிபரிடம் மோடி வலியுறுத்தியுள்ளார்.


