News June 26, 2024
25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தடயங்கள் இருக்குமா?

நிலவின் தொலைதூர தென் பகுதியில் இருந்து, பாறை துகள்கள் & மணல் மாதிரிகளை சேகரித்த சீனாவின் ‘சாங் – இ6’ விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகளில், 25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலவின் அரிய தடயங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. நிலவின் இருபுறங்களுக்கு இடையே உள்ள புவியியல் வேறுபாடுகளுக்கு, இந்த மாதிரிகள் பதில் அளிக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Similar News
News October 25, 2025
பேப்பரில் பொட்டலம் கட்டிய உணவுகளை சாப்பிடலாமா?

செய்தித்தாள்களில் பொட்டலம் கட்டப்படும் உணவுப் பொருள்களை உட்கொள்வது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என FSSAI எச்சரித்துள்ளது. நாளிதழ்களில் அச்சிடும் மையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும், பேசிலஸ் நுண்ணுயிரியல் தாக்குதலும் குடற்புற்றுநோயை ஏற்படுத்துகிறதாம். இதன் காரணமாகவே உணவுப் பொருள்களை பேக்கிங் செய்வதற்கும், பாதுகாத்து வைப்பதற்கும் தாள்களை பயன்படுத்த வேண்டாமென FSSAI அறிவுறுத்தியுள்ளது.
News October 24, 2025
‘பைசன்’ பார்த்துவிட்டு பாராட்டிய வைகோ

‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வைகோ போனில் பேசி வாழ்த்து தெரிவித்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு நான் பார்த்த சினிமா, இதை எடுத்த இயக்குநர் யார் என தேட வைத்தது மாரி, நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள், நான் இங்கிருந்தே கட்டித் தழுவுகிறேன் என வைகோ தெரிவித்ததாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
News October 24, 2025
அனைவருக்கும் ₹1,000 உரிமைத் தொகை.. வந்தது அப்டேட்

வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, அனைத்து மகளிருக்கும் ₹1,000 உரிமைத் தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், தகுதியுள்ள மகளிருக்கு டிச.15-ம் தேதி முதல் பணம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போதைய நடவடிக்கையால் லட்சக்கணக்கான மகளிர் பயனடைய உள்ளனர். SHARE IT.


